நெஞ்சு வலியால் கைதி 'அட்மிட்'
சேலம்: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பெரும்பாலை, காலப்பட்-டியை சேர்ந்தவர் சண்முகம், 51. இவர் சில ஆண்டுக்கு முன், பென்னாகரத்தில் நடந்த கொலை வழக்கில் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்-சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement