பெருவில் சிறிய ரக விமானம் விபத்து; சுற்றுலா பயணிகள் 13 பேர் உயிரிழப்பு


நமது நிருபர்




பெரு நாட்டின் தெற்கு பகுதியில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

பெருவின் நாஸ்கா நகரில் இருந்து 6 கி.மீ தொலைவிலும், உலகப் புகழ்பெற்ற நாஸ்கோ கோடுகள்(Nazca Lines) அமைந்துள்ள இடத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள புவெப்லோ வியெஜோ(Pueblo Viejo) என்ற இடத்தில் சுற்றுலா பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் 11 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். விமானம் செஸ்னா கிராண்ட் கேரவன் என்ற வகையை சேர்ந்த Aerodiana என்ற உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமானது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமான விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement