கோமுகி ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம்
கள்ளக்குறிச்சி: கோமுகி ஆற்றுப்பாலம் உள்ள பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்து வருகின்றனர்.
கோமுகி ஆற்றுப்பாலம் வழியாக நகரப்பகுதியிலிருந்து தனியார் பள்ளி, கல்லுாரிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவைகளுக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கின்றன. இனால் இந்த பகுதியில் விளக்குகள் எரியாததால் ் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.
இதனால் மாலை நேரத்தில் இப்பகுதியை கடந்து செல்லும் பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவல் பணிகளுக்காக செல்பவர்களுக்கு விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, கோமுகி ஆற்றுப்பாலம் பகுதியில் சாலையோரம் மின் விளக்குகள் எரிவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement