ஜாமினில் தலைமறைவானவர் 2 ஆண்டுக்கு பின் கைது
நெய்வேலி: நெய்வேலியில் திருட்டு வழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான வாலிபரை 2 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்,37; இவரை, கடந்த 2006ம் ஆண்டு நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பண்ருட்டி சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை நடந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த கார்த்திக், கடந்த 2 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், மந்தாரக்குப்பத்தில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் நேற்று கைது செய்து, பண்ருட்டி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement