திருச்சி விமான நிலையத்தில் ரூ.3.5 கோடி கஞ்சா பறிமுதல்

திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு, 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா கடத்திவர் கைது செய்யப்பட்டார்.

மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானத்தில் நேற்று இரவு, திருச்சி விமான நிலையம் வந்த பயணியரிடம், வான் நுண்ணறிவு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சந்தேகத்தில், தஞ்சாவூரை சேர்ந்த ஆண் பயணியின் உடமையை சோதனை செய்த போது, 3.5 கிலோ அளவில், 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹைட்ரோபோனிக்' எனப்படும் உயர்ரக கஞ்சாவை அவர் கடத்தி வந்தது தெரிந்தது.

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement