ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் இறுதிகட்டம்; புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார் டிரம்ப்

13


வாஷிங்டன்; இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத அளவிற்கு அமெரிக்கா தாக்குதலுக்குத் தயாராக உள்ளது, ஆனால் ஒப்பந்தம் விரைவாக இறுதி செய்யும் தருவாயில் இருப்பதால் தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு காணப்படாத வகையில் வலிமையுடன் அமெரிக்க ராணுவம் ஈரானுக்கு எதிராகப் போரிட ஆயத்த நிலையில் உள்ளது. அப்படியிருந்தும், ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதால், எந்தவொரு தாக்குதலையும் நிறுத்தி வைக்குமாறு ஈரானும், மற்ற மத்திய கிழக்கு நாடுகளும் நம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறப்பதும், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கும். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், உலகின் எதிர்கால நலனுக்காகவும், ஈரானுடன், விரைவாக ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடிந்தால், தாக்குதலை ரத்து செய்ய நான் ஒப்புக்கொண்டுள்ளேன். ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிறுத்தி வைத்துள்ளது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பதிலடி கொடுப்போம்!

அமெரிக்கப் படைகள் ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்து, அதன்மூலம் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை அதிகரித்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார்.

Advertisement