முஸ்லிம் லீக் கட்சி தலைவர் மகன் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்

1

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மகன் மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மூத்த மகன் மருத்துவர் கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

தனது அன்பு மகனை இழந்து தவிக்கும் பேராசிரியர் காதர் மொய்தீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Advertisement