பாட்டிசை பட்டி மன்றம்
சங்கராபுரம், ஆக.3-
பூட்டை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பில் பாட்டிசை பட்டி மன்றம் நடந்தது.
சங்கராபுரம் ரோட்டரி தலைவர் துரை தலைமை தாங்கினார்.துணை தலைவர் செல்லதுரை முன்னிலை வகித்தார்.செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார்.முன்னாள் துணை ஆளுனர் முத்துக்கருப்பன் பட்டிமன்ற குழுவினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பக்தியும் பண்பாடும் கலாசாரமும் சிறக்க பாடியவர்கள் வானொலி காலத்து கவிஞர்களா, இன்றைய சின்னத்திரை காலக் கவிஞர்களா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி அன்னலட்சுமி,திண்டுக்கல் கனிமொழி,கன்னியாகுமரி மங்கையற்கரசி,சென்னை கிலோனா ஆகியோர் பேசினர்.
நடுவர் ஆடுதுரை அழகு பன்னீர்செல்வம் வானொலி காலத்து கவிஞர்களே என்று தீர்ப்பு வழங்கினார்.ரோட்டரி கிளப் பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.