குட்கா விற்பனை பெண் கைது

உளுந்தூர்பேட்டை, ஆக. 3

வீட்டில் பதுக்கி கள்ளத்தனமாக மது பாட்டில்கள், குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்த நெடுமானூரில் வீட்டில் பதுக்கி கள்ளத்தனமாக மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எலவனாசூர்கோட்டை இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது 8 மது பாட்டில்களையும், மற்றும் 90 பாக்கெட் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து நெடுமானூர் பகுதியை சேர்ந்த ஜோதி மனைவி மலர, 59; என்பவரை கைது செய்தனர்.

Advertisement