இதே நாளில் அன்று
ஆகஸ்ட் 3, 1955
வேலுாரில், சந்திரசேகர் என்பவரது மகனாக, 1955ல் இதே நாளில் பிறந்தவர் சி.மோகன்.
இவர், வேலுாரில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை ஐ.ஐ.டி.,யில் ரசாயன பொறியியலில் பி.டெக்., முடித்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலையில் பிஎச்.டி., படிப்பை முடித்தார். சான் ஜோஸ் நகரில் உள்ள சர்வதேச புகழ்பெற்ற ஐ.பி.எம்., நிறுவனத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார்.
அதன் புதுடில்லி, பெங்களூரு கிளைகளில், 38 ஆண்டுகளுக்கு மேல் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றினார். அந்நிறுவனத்துக்கு, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பல மென்பொருட்களை உருவாக்கி, 50க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்றார்.
அமெரிக்காவின் தேசிய பொறியியல் அகாடமி உறுப்பினர், 'எட்கர் எப்.காட்' விருது உள்ளிட்ட கவுரவங்களை பெற்றார். சீனாவின், சிங்குவா பல்கலையின் வருகைதரு பேராசிரியர், தமிழக மின்னாளுமையின் கவுரவ ஆலோசகர், கேரளாவின், 'பிளாக் செயின் அகாடமி' ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அமைப்பு களில், பொறுப்புகள் வகிக்கிறார்.
இவரது, 71வது பிறந்த தினம் இன்று!
வாழ்த்துக்கள் .பல்லாண்டு நீடுடி வாழ்க என்று இந்த வேலூர் ஊர்க்குருவி வாழ்த்துகிறது .