பாரம்பரிய ஊஞ்சலில் உற்சாகம்: ஜல்லிபட்டியில் கொண்டாட்டம்
உடுமலை: ஜல்லிபட்டி பொம்மையன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி ஊஞ்சல் அமைத்து, மக்கள் உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.
உடுமலை அருகே ஜல்லிபட்டியில் பொம்மையன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடிப்பெருக்கு நாளில், ஊஞ்சல் துாரி அமைத்து சிறப்பு வழிபாடு செய்வது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
அவ்வகையில், நேற்றும் பெரிய மரங்கள் நட்டு, அகல மரப்பலகை அமைத்து, அதற்கு சந்தனம், குங்குமமிட்டு, மாவிலை தோரணத்துடன், மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து ஊஞ்சலுக்கு வழிபாடு செய்தனர்.
பின்னர், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும், ஊஞ்சலில் ஆடி மகிழ்ந்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர். கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement