திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம்கோர்ட்
-நமது நிருபர்-
மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு அடிப்படையில், 2025 டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களை தவிர, திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என, உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றாததால் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கலாகின.
மேல்முறையீடு
இந்த வழக்கில், தமிழக அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க, ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட் மதுரைக் கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார் , ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது தீபம் ஏற்ற வேண்டும் என இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்தது.
விசாரணை
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 03) திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு வந்தது. தீர்ப்பு இந்தாண்டு ஜனவரி மாதம் வந்துள்ளது. இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு தரப்பில், ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு தாமதம் ஆனதாக தெரிவித்தனர். இதை ஏற்காத நீதிபதிகள், எதிர் மனுதாரர்களை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
தீபத்துாணில் தீபம் ஏற்றும்படி ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நிராகரித்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது:
* தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.
* தீபத்தூணில் தீபம் ஏற்ற ஜனவரி மாதம் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில் 6 மாதம் கழித்து அப்பீல் செய்வது ஏன்?
* தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் ராமரவிக்குமார், மதுரை கலெக்டர் பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
@block_P@
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:
கார்த்திகை தீபம், 150 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இருக்கும் தீப மண்டபத்தில் தான் ஏற்றப்படுகிறது. தீபத்துாணில் ஏற்றப்படுவது இல்லை. கோவில் ஆவணத்திலோ, முந்தைய உத்தரவுகளிலோ, ஆகமங்களிலோ இல்லாத ஒரு வழிபாட்டு நடைமுறையை ஐகோர்ட் கண்டுபிடித்துள்ளது.
அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவின்படியான பக்தர்களின் வழிபடும் உரிமை என்பது, பொது கோவில்களில் பின்பற்றப்படும் சடங்கு நடைமுறைகளில் மாற்றம் செய்வதில் இல்லை. சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றில்
மத நிறுவனங்களின் சுதந்திரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது.
இவ்வாறு மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.block_P
என்னையா, இங்க சிலர் மொழிபெயர்ப்பில் என்ன தாமதம் அப்படின்னு பதிவிட்டிருக்காங்க. அதுல பாருங்க தீர்ப்பு தமிழ்ல இருந்துச்சா, எங்க ஆஸ்தான வக்கீல்கள் கப்பில், சிங்கிவி இவங்களுக்கு தமிழ் தெரியாதா. அதனாலேத்தான் மொழிபெயர்ப்பு.
மொழிபெயர்க்க தாமதம் ? முருகனுக்கே மொட்டையடித்து காதுகுத்துகிறார்கள்.
சடங்கு முறைகளை மாற்ற முடியாது என்றால் ஆலயங்களிலுள்ளேயே அறநிலையத்துறை ஆபீஸ் அமைத்து பக்தர்களின் காணிக்கை பணத்தில் செலவு செய்து நாட்டாமை செய்வது எதில் சேர்த்தி?. இதற்கெல்லாம்கூட ஆகமத்தில் இடமில்லையே.
கனம் கோர்ட்டார் அவர்கள் கூறினார், தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மனுக்கள் முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுக்கப்படும்.
அதவாது எவ்வளவு நீளம் திரி வேண்டும் எத்தனை லிட்டர் எண்ணெய் வேண்டும். எவ்வளவு தூரத்திலிருந்து கையில் நெருப்பு படாமல் விளக்கை ஏற்ற வேண்டும் என்று முழுமையாக விசாரித்த பிறகு தான் எந்த முடிவும் எடுப்பர். மக்களே பொறுமையா இருங்க . நம்மளோட கொள்ளு பேரன் அல்லது பேத்தி விளக்கு எரிவதை பார்த்தால் நம் அதிர்ஷ்டம்
புதிய கட்சி, பழைய ஆட்சி எல்லார் மோஞ்சியிலேயும் சாணி. வேண்டும்
மத வெறி கும்பலுக்கு துணை போகாமல் திமுக 2 என்ற நிலையை கைவிட்டு தீபம் உடனே ஏற்ற வேண்டும் .
முருக பெருமான் நின்று காப்பார்.
தர்மம் வெல்லும்.
மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு ஆங்கிலத்தில் இருக்கும்.. தமிழ்நாடு அரசு அலுவல் மொழிகள் தமிழும் ஆங்கிலமும்.. இவர்கள் எங்கே போய் எந்த மொழியில் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள் லேட் ஆவதற்கு?: ஒருக்கால் பே..பே..பெப்பெப்பே.... மொழிக்கு மாற்றம் செய்துள்ளார்களா?
எல்லாத்துலையும் திமுகவை சென்ற வழிக்கு எதிர்மறையான வழியில் செல்வது போல நடிக்கும் தவெக நம்ம தீபம் ஏற்றும் விஷயத்துல எப்படி ஒன்னா ஒட்டிக்கிறாங்க!!.
அப்பன் முருகனே வந்து மலை உச்சியில் விளக்கு ஏற்றினால் தான் உண்டு.