முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏவுக்கு நிபந்தனையுடன் ஜாமின்

1

சென்னை: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய, விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், அவதுாறாக பேசியதாக, கடந்த 20ம் தேதி துாத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரது ஜாமின் மனுவை, துாத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மார்க்கண்டேயன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, ''கைது செய்வதற்கான காரணங்களில் திருப்தி அடைந்த பின்னரே, தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்' என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

திமுக எம்எல்ஏ ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 03) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு சென்னை ஐகோர்ட் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

* இனி மிரட்டல் விடுக்கும் வகையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கவும், நாள்தோறும் தூத்துக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திடவும் நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

* தமிழக சட்டபை கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மட்டும் போலீஸ் ஸ்டேஷில் ஆஜராவதில் இருந்து ஐகோர்ட் விலக்கு அளித்துள்ளது.


சிறப்பு வீடியோ!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு ஐகோர்ட் ஜாமின்; விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement