இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு
புதுடில்லி: காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு, பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 8 பதக்கம் கிடைத்தது. தாயகம் திரும்பிய இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு, மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் டில்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், மத்திய விளையாட்டு அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை வாழ்த்தி, பரிசுத்தொகை வழங்கினார்.
தொடர்ந்து 3வது முறையாக (2018, 2022, 2026) தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு, ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெள்ளி வென்ற ரிஷிகாந்தா சிங், தமிழகத்தின் ராஜா முத்துப்பாண்டி, ஞானேஷ்வரி யாதவ், அஜய பாபு, ஹர்ஜிந்தர் கவுர், லவ்பிரீத் சிங் ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டது. வெண்கலம் வென்ற பிந்தியாராணி தேவிக்கு, ரூ. 10 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.
மன்சுக் மாண்டவியா கூறுகையில், ''நீங்கள் வென்ற ஒவ்வொரு பதக்கமும் நாட்டு மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இம்முறை பதக்கம் வெல்ல முடியாதவர்கள் தோல்வியடைந்ததாக கருத வேண்டாம். நீங்கள் வெற்றி பெறுவதற்கான பாடத்தை கற்றுக்கொண்டீர்கள்,'' என்றார்.
மீராபாய் சானு கூறுகையில், ''இந்தியாவுக்காக பதக்கம் வென்றது மகிழ்ச்சி. இப்பாராட்டு விழா எங்களுக்கு முக்கியமான தருணம். இது, அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட ஊக்கம் அளிக்கும். இதுவரை ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றதில்லை. இம்முறை பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க முயற்சிப்பேன்,'' என்றார்.
மேலும்
-
மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு: இ.ஓ., எச்சரிக்கை
-
'அட்ராசிட்டி' செய்த இளைஞர்கள் 5 டூவீலர் பறிமுதல் செய்து வழக்கு
-
கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
-
வல்வில் ஓரி விழா நிறைவு ரூ.83.98 லட்சத்தில் நலத்திட்டம்
-
மாடியில் இருந்து விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி பலி
-
மது விற்றவர் கைது