சிறுமி பலாத்காரம்  வாலிபர் மீது ‘போக்சோ’ 

நெய்வேலி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர். கடலுார் மாவட்டம், வடலுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ரமணா,20; இவர், 17 வயது சிறுமியை  காதலித்து வந்தார். இதற்கிடையே, அவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார் ரமணா மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது 

விருத்தாசலம், ஆக. 4–

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

விருத்தாசலம் அடுத்த பள்ளிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா, 23. இவர் மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை, காதலிப்பதாக கூறி, கற்பழித்துள்ளார். இதில், சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, சூர்யாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement