ஈஸ்வரன் கோவில் பாலம்: முதல்வர் திறப்பு

திருப்பூர்:திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலத்தை, முதல்வர் விஜய் காலை 10:00 மணிக்கு சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

பாலம் கட்டி முடிக்கப்பட்டும், திறக்கப்படாமல் இருந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். திறப்பு தாமதமானால், தாங்களே திறந்து வைப்போம் என பா.ஜ.,வினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி வகுப்பறைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். அதில், திருப்பூரின் புதிய நொய்யல் உயர்மட்டப் பாலமும் இடம்பெற்றுள்ளது.

திறப்பு விழாவையொட்டி பாலம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும், சிக்கண்ணா அரசு கல்லுாரியில், காமராஜர் கல்லுாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டடத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

.

Advertisement