இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சென்டாக் காலக்கெடு நீட்டிப்பு
புதுச்சேரி: பிற மாநிலங்களில் இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க புதுச்சேரி மாணவர்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொந்த மாநிலத்தில் போதுமான மருத்துவ உயர்கல்வி வாய்ப்புகள் அல்லது போதிய மருத்துவக் கல்லுாரிகள் இல்லாத மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பிற மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
அந்த வகையில், 2026-–27-ம் கல்வியாண்டில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசு மருத்துவக் கல்லுாரிகளில் வழங்கப்படும் இளங்கலை பி.எஸ்.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ். மற்றும் பி.எச்.எம்.எஸ். படிப்புகளில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சேருவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
தற்போது, தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு, மாணவர்களின் கோரிக்கையை ஏற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், இணையவழி மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை வரும் 7ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
தமிழ்நாடு தேர்வுக் குழுவின் இந்த அவகாச நீட்டிப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி சென்டாக் அமைப்பும் மாணவர்களுக்கான சான்றிதழ் சமர்ப்பிப்புத் தேதியை மாற்றியமைத்துள்ளது. அதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் சுய சான்றளிக்கப்பட்ட அசல் நகலை புதுச்சேரி சென்டாக் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளினை வரும் 10ம் தேதி, மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் www.tnayushselection.org மற்றும் www.centacpuducherry.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பச் சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், குறைகள் அல்லது தெளிவுரைகள் தேவைப்பட்டால், விண்ணப்பதாரர்கள் சென்டாக் இணையதளத்தில் உள்ள தங்களின் உள்நுழைவு டாஷ்போர்டு மூலமாக நேரடியாகத் தெரிவித்துத் தீர்வைப் பெறலாம். இதுதவிர, 0413-2655570 மற்றும் 0413-2655571 ஆகிய சென்டாக் உதவி தொலைபேசி எண்களையும் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.
மேலும்
-
ஆஹா ஆமதாபாத்: 2030ல் 'நுாற்றாண்டு' காமன்வெல்த் திருவிழா
-
'குத்து'...பத்து...இந்தியா 'கெத்து' * காமன்வெல்த் செயல்பாடு எப்படி
-
திண்டுக்கல்-திருப்பூர் அணிகள் மோதல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
செஸ்: பிரக்ஞானந்தா அபாரம்
-
இந்தியாவுக்கு 22 பதக்கம் * பாரா பாட்மின்டனில்...
-
இந்திய பளுதுாக்குதல் நட்சத்திரங்களுக்கு பாராட்டு