விண்ணில் பாய தயார் நிலையில் இரு செயற்கைக்கோள்கள்
சென்னை: மத்திய அரசு அனுமதி அளித்ததும், விண்ணில் பாய, இரண்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன.
இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான, 'நேவிக்' செயற்கைக்கோள், 10 ஆண்டு செயல்பாட்டுக்கு பின், தற்போது காலாவதியாகி உள்ளது. இதனுடன் இணைந்து செயல்பட்ட, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1பி, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 2, என்.வி.எஸ் - 01 ஆகிய செயற்கைக்கோள்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.
நான்கு செயற்கைக் கோள்கள் இணைந்தால் தான், இருப்பிடங்களை துல்லியமாக அறிய முடியும் என்ற நிலையில், என்.வி.எஸ்., - 03 மற்றும் ஜிசாட் - 1ஏ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்த தயாராக, ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய விண்வெளித் துறையின் அனுமதி கிடைத்ததும், எரிபொருள் நிரப்பப்பட்டு, அவை ஏவப்படும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தனித்து விடப்பட்டவர் ஸ்டாலின் தான்: தவெக அமைச்சர் ரமேஷ் காட்டம்
-
திமுக ஆட்சியில் நடந்த குவாரி முறைகேடுகள்; விபரங்களை திரட்டுகிறது கனிமவளத்துறை
-
பள்ளிகளில் அரசியல் கோஷம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்
-
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
முனீஸ்வர சுவாமி கோவில் திருவிழா
Advertisement
Advertisement