தனித்து விடப்பட்டவர் ஸ்டாலின் தான்: தவெக அமைச்சர் ரமேஷ் காட்டம்
திருச்சி: ''சட்டசபை நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்க்கும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தனித்து விடப்பட்டுள்ளார்,'' என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் அவர் அளித்த பேட்டி: அனைத்து பிரச்னைகளையும் பேசி தீர்க்க வேண்டிய அவசியமில்லை. முதல்வர் விஜய் செயலில் காட்டக்கூடியவர்.
தனித்து விடப் பட்டவர் யார் என்றால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தான். சட்டசபையில் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், தற்போது, சட்டசபை நிகழ்வுகளை வீட்டில் இருந்தபடி பார்க்கும் வகையில் தனித்து விடப்பட்டுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வெறுப்பு அரசியலை விட்டு, வெற்றி பெறுவதை பற்றி பேசினால், உள்ளாட்சி தேர்தலில், சில இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
'ஊழல் வழக்குக்கு பயந்து, ஓடி ஒளியவில்லை' என்று சொல்லும் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்; நீதிமன்றம் சொல்லும் உத்தரவுகளை தைரியமாக பின்பற்ற வேண்டியது தானே? ஊழல் செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப் படுவர்.
கோவில்களில் பக்தர்களிடம் பணம் வாங்குவது நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் நிலம் மோசடி விவகாரத்தில், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம்.
ஹிந்து சமய அறநிலையத்துறையில் நடந்த ஊழல் தொடர்பாக, வெள்ளை அறிக்கை வெளியிட ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு ரமேஷ் தெரிவித்தார்.
your age is his experience. so don't behave as if you know everything.
ஓவரா ஆட்டம் போட்டா அழிஞ்சிடுவீங்க ஜாக்கிரதை
Time is the great punisher for arrogance autocracy.
First get your department functions inorder.Then you could comment about others .
அய்யா தேவையில்லாமல் பேசி அரசிற்கு அவப் பெயர் சம்பாதிக்கிறார்! இந்த வீண் ஜம்பப் பேச்சைக் குறைத்து உங்கள் வீரத்தை வேலையில் காட்டுங்கள்! அனுபவம் அற்ற தற்குறி என்று எதிர்க்கட்சியும் பொது மக்களும் பேச இடம் கொடுக்க வேண்டாம்!
காலை செய்தி திரட்டினால் இவர்களின் லாவணி தான் பார்க்க முடிகிறது இது மக்களை முட்டாளாக நினைக்கும் திராவிடத்தின் கோளாறு.
உங்களுக்கு தைரியம் இருந்தால் சேகர் பாபு செய்த ஊழலைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுங்கள் பார்ப்போம்
ஊழல் அரசியல்வாதிகளைத் தண்டிக்க சட்டங்கள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த அதிகாரம் உள்ள யாருக்கும் விருப்பமில்லை! மத்திய மாநில அரசுகளும், நீதி, காவல் நிர்வாகமும் முனைப்பு காட்டுவதில்லை!
அஹிம்சையை அளவுக்கு மீறி கடைபிடிக்கும் ஜனநாயக சுதந்திர நாடு! யாரையும் கண்டிக்கவோ தண்டிக்கவோ விரும்பாத ஆட்சியாளர்கள்! கண்டுக்காத நல்ல மக்கள்! மக்களாட்சி வாழ்க!மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது