கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் தவறான அணுகுமுறையை கண்டித்து, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், நேற்று மாலை, கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்-களின் இணை பதிவாளர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செய-லாட்சியர், 16 சங்கங்களுக்கு மேல் செயலாட்சிய-ராக கூடுதல் பொறுப்பில் பணி மேற்கொள்ளும்-போது, கண்காணிக்க தவறினார் என, காரணம் கூறி, பணிநீக்கம் செய்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். அனைத்து பணிகளை மேற்கொள்ள போதிய அடிப்படைகளை ஏற்படுத்தி, போதிய கால அவ-காசம் வழங்கி, பணி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும். அரசாணை வெளியிட்டு ஓராண்டு கடந்தும் பணி ஆணை வழங்காத, மூன்று துணை பதிவாளர்களுக்கு, உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
* தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்-கத்தின் சார்பில், தர்மபுரி கூட்டுறவுத்துறை மண்-டல இணைப் பதிவாளர் அலுவலகம் முன், மாவட்ட தலைவர் அனுமன் தலைமையில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது