திருட்டை தடுத்த இருவர் மீது தாக்குதல்

சத்திரப்பட்டி: பழநி சத்திரப்பட்டி அருகே கோம்பை பட்டியில் நல்லதங்காள் ஓடையில் மண் திருடிய நபர்களை தடுத்த இருவர் மீது, தாக்குதல் நடந்துள்ளது.

இப்பகுதி ஓடையில் அடிக்கடி மண் திருட்டு நடந்து வருகிறது. இதுகுறித்து அறிந்த பகுதியினர் அதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நேற்று இரவு நல்லதங்காள் ஓடையில் மண் எடுக்க மர்ம நபர்கள் சிலர் வாகனங்களை பயன்படுத்தி உள்ளனர். இதனை அறிந்த த.வெ.க.,வை சேர்ந்த கோம்பைபட்டி செல்லத்துரை 27, மண் திருட்டை வீடியோவாக படம் பிடித்துள்ளார். அதை பார்த்த மண் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் செல்லத்துரையை கல்லால் தாக்கி உள்ளனர். உடனடியாக அங்கு இருந்த விவசாயி ராஜாராம் 55, அவர்களை தடுக்க சென்றுள்ளார். ஆனால் அவர்கள் தடுக்கச் சென்ற விவசாயியும் தாக்கி உள்ளனர். ராஜாராம், செல்லத்துரை இருவரும் பலத்த காயமடைந்து பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement