'மாஞ்சா' காற்றாடி பறக்க விட்டோர் கைது
புதுவண்ணாரப்பேட்டை:மாஞ்சா நுாலில் காற்றாடி பறக்க விட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சிவன் நகர் 3வது தெருவில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாஞ்சா நுாலில் காற்றாடி பறக்க விட்ட இருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 20, பிரசாந்த், 21, என்பது தெரியவந்தது. இருவரும், 'ஆன்லைன்' வாயிலாக காற்றாடி வாங்கி பறக்க விட்டது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், இரண்டு காற்றாடிகள், மாஞ்சா நுாலுடன் கூடிய லொட்டாய்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement