தமிழக பட்ஜெட் பேட்டி: பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது

த.வெ.க., புதிய அரசால் சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பாராட்டி குறிப்பிடத்தக்க புதிய திட்டங்கள் ஏதுமில்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தேர்தலின் போது அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகள் பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட் உரையில் இல்லை. அந்த வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற சாத்தியக்கூறு பற்றி கூட அறிவிப்பு இல்லை.

முந்தைய அரசுக்கு நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் திருமண நாளில் மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம், பட்டுச்சேலை, பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் என்று தேவையற்ற திட்டங்களுக்கு கணிசமான நிதி ஆதாரத்தை விரையம் செய்வதால் தமிழ்நாட்டில் என்ன முன்னேற்றம் விளையப் போகிறது. தமிழகத்தின் தொழில்கள், வர்த்தக அபிவிருத்திக்கு வித்திடும் எந்த புதிய திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

-அஸ்மாபாக் அன்வர்தீன், மாவட்ட தலைவர், தொழில் வர்த்தக சங்கம், ராமநாதபுரம்.

----* புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு வரவேற்பு: கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு கல்லுாரி மாணவர்களுக்கு லேப்டாப், பள்ளி மாணவர்களுக்கு ெஹல்மெட் உடன் நவீன சைக்கிள் திட்டம், அண்ணன் சீர், ஏழை பெண்கள் திருமணத்திற்கு 8 கிராம் நகை, பட்டுசேலை, வெற்றி வீடு திட்டம் அறிமுகம், ரூ.3500 கோடியில் செயல்படுத்தப்படும் உள்ளிட்டவை வரவேற்க தக்கவை.

குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம், அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிப்பு. இத்திட்டத்துக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம். பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் விஜய் முன்வர வேண்டும்.

-பழனிக்குமார், மாவட்டத்தலைவர், வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ராமநாதபுரம்.

Advertisement