சின்னசேலம் குறுமைய அளவில் எரிபந்து விளையாட்டு போட்டி
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் குறுமைய அளவில் எரிபந்து போட்டி உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான குறு மைய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் செஸ், சிலம்பம், கேரம், டெனிகாய்ட், பீச் வாலிபால், டேபில் டென்னிஸ், கால்பந்து, வாலிபால், கபடி, ஹாக்கி, கோ– கோ உள்ளிட்ட பல்வேறு குழு மற்றும் தடகள விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
சின்னசேலம் குறு மையத்திற்கான விளையாட்டு போட்டிகள் தொட்டியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதில் செஸ், சிலம்பம், கேரம், டெனிகாய்ட், கபடி, பீச் வாலிபால் உட்பட பல்வேறு போட்டிகளில் நடக்கிறது. பள்ளியில் நடந்த எரிபந்து போட்டியினை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி துவக்கி வைத்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மோகன் செல்வம் மேற்பார்வையில் போட்டிகள் நடக்கிறது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ராஜா, உடற்கல்வி இயக்குனர்கள் ராதாகிருஷ்ணன், மணிமேகலை, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், பாலு, ஜெயசுதா, தினகரன், நாகேந்திரன், சிங்காரவேலு, பாலமுருகன், சாமிதுரை, ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
குறுமைய விளையாட்டில் குழு போட்டிகளில் முதல் இரு இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அணிகள், தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், முதலிடம் பிடிப்போர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.