பாகிஸ்தானில் 30 பயங்கரவாதிகள் கொலை?

4

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மர்ம நபர்களால் 30-க்கும் மேற்பட்ட லஷ்கர் - இ- தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக, அதன் நிர்வாகி ஒப்புக்கொண்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானை தலைமையிடமாக வைத்து லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த, 2008ல், மும்பை தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் இந்த அமைப்புக்கு தொடர்புள்ளது-.

இந்நிலையில், நம் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்காக, தேடப்பட்டு வந்த அந்த அமைப்பின் மூத்த பயங்கரவாதி ரிஸ்வான் ஹனிப் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், 'கடந்த நான்கு ஆண்டுகளாக லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், நிர்வாகிகளும், பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவல்கோட், முசாபராபாத், ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொல்லப் பட்டுள்ளனர்.

'இந்த சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்' என, தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை நம் நாட்டு உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement