திரிஷாவுக்கு நற்பணி மன்றம்; மதுரையை கலக்கும் போஸ்டர்
மதுரை: 'த.வெ.க.,வில் இணைந்து கட்சிப்பணியாற்ற வேண்டும்' என, நடிகை திரிஷாவிற்கு மறைமுகமாக அழைப்புவிடுக்கும் வகையில், மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் துவக்கப்பட்டுள்ளது .
முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், நடிகை திரிஷா பங்கேற்றார். நடிகர் அஜித் தாய் இறந்ததற்கு விஜய் உடன் சென்று, அஞ்சலி செலுத்தினார். தவிர, சில நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்ற பழைய வீடியோக்கள், சமூக வலைதளங்களில் 'டிரெண்டிங்' ஆக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக மதுரையில், திரிஷாவிற்கு விஜய் ஆதரவாளர்கள், நற்பணி மன்றத்தை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் நகர் முழுதும் ஒட்டிய போஸ்டரில், திரிஷாவுடன் த.வெ.க.,வின் கொள்கை தலைவர்களுள் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியார் படத்தையும் வைத்துள்ளனர்.
போஸ்டரில், 'அன்பு அக்கா திரிஷாவிற்கு எனவும், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்' என பதிவெண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், 'எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண், எங்கள் மதுரை என்றும், மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால்' என்றும் தெரிவித்துள்ளனர்.
திரிஷா, த.வெ.க.,வில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என போஸ்ட ர் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர்.
அட பாவிகளா... திருந்தவே மாட்டீங்களா? கோமாளித்தனத்திற்கு அளவே இல்லையா?மேலும்
-
தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறி: பருவ மழையை எதிர்பார்க்கும் இரண்டு மாவட்ட விவசாயிகள்
-
குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
-
அரசு மாதிரி பள்ளியில் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி
-
கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள்
-
யாசகம் மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரம் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
-
தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களில் விவசாயம் கேள்விக்குறி: பருவ மழையை எதிர்பார்க்கும் இரு மாவட்ட விவசாயிகள்