குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழே குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. பஸ் நிலையம் செல்லும் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் கீழ் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.
இந்த பகுதியை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இரவு நேரங்களில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பள்ளங்களில் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. தொடர்ந்து புதிய பஸ் நிலையத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலையில் பஸ் நிலையம் செல்லும் முக்கிய சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, பஸ் நிலையம் செல்லும் முக்கிய சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தனித்து விடப்பட்டவர் ஸ்டாலின் தான்: தவெக அமைச்சர் ரமேஷ் காட்டம்
-
திமுக ஆட்சியில் நடந்த குவாரி முறைகேடுகள்; விபரங்களை திரட்டுகிறது கனிமவளத்துறை
-
பள்ளிகளில் அரசியல் கோஷம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்
-
கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
-
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
முனீஸ்வர சுவாமி கோவில் திருவிழா