அரசு மாதிரி பள்ளியில் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாணவர்கள் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுடன் 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் (எலைட் பள்ளி) மாணவர்கள் பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களுடன் கலெக்டர் பத்மஜா கலந்துரையாடி, தலைமைத்துவ பண்புகள், கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் எதிர்கால இலக்குகள் மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து கலந்துரையாடினார்.
மேலும், மாணவர்களின் கருத்துகளை ஆர்வமுடன் கேட்டறிந்து, அவர்களுக்கு ஊக்கமளிக்கும் அறிவுரைகளையும், வழிகாட்டுதல் களையும் வழங்கினார்.
சி.இ.ஓ., கார்த்திகா, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement