கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த அரசு மருத்துவமனை செவிலியர்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் ஆட்குறைப்பு தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய பணியிடங்களை உருவாக்காமல், தேவையற்ற பணியிட மாறுதலை கைவிட வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரந்தர நியமனங்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement