மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி
அன்னூர்: மொண்டிபாளையம், மகா பைரவர் கோவிலில், மழை வேண்டி இன்று 108 கலச அபிஷேகம் நடைபெறுகிறது.
மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் மற்றும் நவ பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த மாத விழா (5ம் தேதி) நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு வேள்வி யாகம் நடைபெறுகிறது.
இதையடுத்து, கோ பூஜை, அஸ்வ பூஜை, சுவான பூஜை நடைபெறுகிறது.
உலக அமைதிக்காகவும், மழை வர வேண்டியும் இரவு 8:30 மணிக்கு பைரவ உற்சவ மூர்த்திக்கு, 108 கலச தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது.
பக்தர்கள் தாங்கள் நேரடியாகவே அபிஷேகம் செய்யலாம். விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
Advertisement
Advertisement