திண்டுக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட்  கட்டுமான பணிகள் துவக்கம்

1

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய பஸ் ஸ்டாண்ட் பள்ளப்பட்ட ஊராட்சி கொட்டப்பட்டியில் ரூ.74.89 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆத்துார் தாலுகா மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் அதனை திறந்து வைத்தார்.

இதையொட்டி திண்டுக்கல் மேற்கு பள்ளபட்டி ஊராட்சி கொட்டப்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் தாலுகா பூம்பாறையை சேர்ந்த பெண்ணுக்கு கல்லுாரி மாணவியர் விடுதியில் சமையலர் பணியிடத்திற்கான பணி ஆணையை வழங்கினார்.

மாநகராட்சி கமிஷனர் பிரேம் ஆனந்த், உதவிப் பொறியாளர்கள் சுவாமிநாதன், சீனிவாசன், மாநகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் உட்பட துறை அலுவலர்கள், மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ஜஸ்டீன் சாந்தப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement