ரூ.6.25 கோடியில் திறன்மிகு மையம்: காணொளியில் முதல்வர் திறந்தார்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ரூ.6.25 கோடி செலவில் தொழில் திறன்மிகு மைய பணிமனை 4.0 கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் விஜய் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

இதையொட்டி கல்லுாரியில் நடந்த விழாவுக்கு கல்லுாரி முதல்வர் சில்வியாஹனா தலைமை வகித்தார். உசிலம்பட்டி எம்.எல்.ஏ., விஜய், சப் கலெக்டர் உத்கர்ஷ்குமார், தாசில்தார் கார்த்திகேயன், உதவிப் பொறியாளர்கள் மணிகண்டன், அழகேசன் பங்கேற்றனர்.

கல்லுாரி முதல்வர் சில்வியா பேசுகையில், ''படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் வகையில் தொழில் சார்ந்த கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது கூடுதல் வசதியாக தொழில் திறன்மிகு மையத்தை அரசு அமைந்துள்ளது. எனவே கல்லுாரியில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும். மாணவர்களுக்கு விடுதி, ரோடு மற்றும் பஸ் வசதிகளை செய்து தர வேண்டும்'' என கேட்டுக் கொண்டார்.

Advertisement