பசுஞ்சோலையாக மாறும் மாரியம்மன் கோவில் நிலம்: மண்ணின் மரபு சார்ந்த 1001 மரக்கன்றுகள் நடவு
உடுமலை: வனத்துக்குள் திருப்பூர், காங்கயம் துளிகள் அமைப்பு, மழை உடுமலை சார்பில், மாரியம்மன் கோவில் நிலத்தில், 1001 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில், 'வெற்றி' அமைப்பு சார்பில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த, 11 திட்டங்கள் வாயிலாக, 25 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, வனத்துக்குள் திருப்பூர்-12 திட்டத்தின் கீழ், 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், உடுமலை நகரின் மத்தியில், புதர் மண்டி காணப்பட்ட மாரியம்மன் கோவில் நிலத்தில், மண்ணின் மரபு சார்ந்த மரக்கன்றுகளை நடவு செய்து, பசுஞ்சோலையாக மாற்றும் வகையில், காங்கயம் துளிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் நிலம் சமன் செய்யப்பட்டு, குழிகள் எடுக்கப்பட்டது.
மேலும், மரங்களுக்கு நீர் வசதி ஏற்படுத்தும் வகையில், போர்வெல், நீரை சேமிக்கும் வகையில் பண்ணை குட்டை மற்றும் நவீன சொட்டு நீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நேற்று மரக்கன்றுகள் நடவு செய்யும் விழா நடந்தது.
இங்கு, ஏறத்தாழ, 10 அடி உயரம் வரை வளர்த்தப்பட்ட, வேம்பு, ஆல், இச்சி, இலுப்பை, நாவல், அரசு, ஆயன், மருதம், புங்கன், நாட்டு வாகை, புளி என, மண்ணின் மரபு சார்ந்த, 1001 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழாவில், மாரியம்மன் கோவில் அறங்காவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் உடுமலை ஜெயக்குமார், மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன், செயல் அலுவலர் மல்லிகா, காங்கயம் துளிகள் அமைப்பு கவுதமன் உள்ளிட்ட நிர்வாகிகள், வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர், மழை உடுமலையை சேர்ந்த இளங்கோவன், துரை ஜவகர், நடராஜன் உள்ளிட்டோர் மற்றும் லயன்ஸ், அபெக்ஸ், உடுமலை தமிழிசைச்சங்கம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம், வாசவி கிளப், ஆகியவற்றின் நிர்வாகிகள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது