உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சென்னை நபர் பலி: 3 பேர் படுகாயம்

உளுந்துார்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா மகன் சிராஜுதீன், 44; டிரைவர். இவர், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு ஷிப்ட் டிசையர் காரை (டிஎன்.12, பிஎஸ். 1261 ) ஓட்டிச் சென்றார்.

காரில் சென்னை கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நாராயணன், 53;, அவரது மனைவி மீனாட்சி, 46; ஆகியோர் உடன் சென்றனர். நேற்று மதியம் 3 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பாலி அருகே கார் சென்றபோது, முன்னே சென்ற ் பைக் மீது மோதி சாலையோர பாலத்தின் தடுப்பு கட்டை மீது மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் டிரைவர் சிராஜுதீன், நாராயணன் , அவரது மனைவி மீனாட்சி, பைக் ஓட்டிச் சென்ற உளுந்துார்பேட்டை தாலுகா மட்டிகை பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் விஜய், 28; ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement