குடும்ப வன்முறை 2 பேருக்கு வலை

பண்ருட்டி: மனைவியை தாக்கிய கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி சுபாஷினி,32; திருமணமாக இரண்டரை ஆண்டாகும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார்.

இந்நிலையில், தாமோதரன் தினமும் குடித்துவிட்டு சுபாஷினியை தாக்கி துன்புறுத்தி வந்தார். அவ்வாறு கடந்த 18 ம் தேதி தாமோதரன் குடிபோதையில், சுபாஷினியை தாக்கினார். மேலும், அவரது அக்கா சுமதியும், சுபாஷினியை தாக்கியுள்ளார்.

இதுகுறித்து சுபாஷினி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் குடும்ப வன்முறை பிரிவில் வழக்கு பதிந்து தாமோதரன் மற்றும் சுமதியை தேடிவருகின்றனர்.  

Advertisement