பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா
தேவிபட்டினம்: திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெரு, காந்திநகர் பாண்டி முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
*மோர்ப்பண்ணை தர்ம முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. மூலவருக்கு 18 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கிடாய் வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
–––
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement