விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வெளிநபர்கள் பணி : விசாரிக்க ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

வடமதுரை:வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் பணி செய்தது குறித்து விசாரிக்க வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சியினர் பேனர் வைத்தனர்.

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட பின்னர் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் விடுமுறை நாட்களில் 20க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் பணி செய்தனர்.

எனவே சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு விசாரிக்க வேண்டும். இதற்கு வாய்மொழி உத்தரவிட்ட மதுரை மண்டல பத்திரப்பதிவு உயரதிகாரி மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அக்கப்போர் இயக்கம் சார்பில் பேனர்கள் வைத்தும், துண்டு பிரசுரங்களை வெளியிட்டும் வலியுறுத்தினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சி சார்பிலும் வடமதுரையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் இந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

Advertisement