மற்றொரு பாகிஸ்தானாக மாறுகிறது வங்கதேசம்: ஷேக் ஹசீனா மகன் எச்சரிக்கை
புதுடில்லி: '' இந்தியாவின் கிழக்கு எல்லையில் வங்கதேசம் மற்றொரு பாகிஸ்தானாக உருவாகி வருகிறது,'' என ஷேக் ஹசீனாவின் மகன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்ற நிகழ்வில் அவரது மகன் சஜீத் வஜீப் கூறியதாவது:
2024 நடந்த போராட்டத்தில் உயிரிழப்புகள் குறித்து அடிக்கடி செய்தி வெளியாகின. அதில் பல்வேறு எண்கள் வெளிவந்தன. ஐநா சாலை 1,400 பேர் எனக்கூறியது. ஆனால் வங்கதேச அரசு 800 பேர் எனக்கூறியது. எஞ்சிய 600 பேர் எங்கே
ஐநா சபைக்கு அவாமி லீக் கட்சி கடிதம் எழுதி உள்ளது. வழக்கறிஞர்களும் தொடர்ந்து ஐநாவுக்கு கடிதம் எழுதினர். ஆனால், ஐநாவுக்கு இதுவரை எந்த பெயரும் அளிக்கப்படவில்லை.
முகமது யூனுஸ் ஆட்சியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பாவி மக்கள் கொன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது முன்னர் நடந்திராத விஷயம்.
அவாமி லீக் கட்சியைச் சேரந்த ஆயிரக்கணக்கானோர் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமினும் வழங்கப்படவில்லை. பலருக்கு 80க்கு மேல் வயதாகிறது. போலீஸ் காவலில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் கிழக்கு எல்லையில், வங்கதேசம் இன்னொரு பாகிஸ்தானாக மாறி வருவது இந்தியாவுக்கு கவலைக்குரிய விஷயம். இன்று இந்திய எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் உருவாகி உள்ளது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகள் வங்கதேசத்தில் சுதந்திரமாக நடமாடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி வெளிப்படையாகவே வந்திருக்கும் செய்தியை மற்ற நாடுகளும் ஐ நா சபையும் கருத்தில் கொண்டு தக்க நடவடிக்கைகள் எடுத்து இந்த இரு தீவிரவாத நாட்டுக்களையும் அடக்கவேண்டும். எந்த நாடும் இவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் பகிஷ்கரிக்கவேண்டும்
முதலில் வங்க தேசம் கிழக்கு பாகிஸ்தானாகவேதான் இருந்தது பிறகு துங்கு அப்துல்ரஹ்மான் போன்ற தேசியா வாதிகள் பாகிஸ்தானிலிருந்துபிறந்து பங்களாதேசம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள் அவர்களுக்குப்பின் ஷேக் ஹசீனா பங்களாதேஷை நன்றாக ஆண்டுதான் வந்தார் ஆனால் இடையினுள் மேற்கு பாகிஸ்தானின் தூண்டுதலினால் அங்கே மாணவர்கள் போராட்டம் நடத்தி நாட்டை சீர்குலையுய வைத்துவிட்டார்கள் அவரையும் நாடு கடத்தி விட்டார்கள் இதற்கு முழுகாரணம் பாகிஸ்தானின் தீய சக்திகள்தான் அவைகள் விரைவிலேயே அழிந்து விடும்
பாகிஸ்தானுக்கு ஜால்ரா போடும் அமைதிகள் ஆண்டால் இது தான் நிலைமை.
மமதா ஆட்சியில் தொடர்ந்திருந்தால், மேற்குவங்க மாநிலமும் பாகிஸ்தானாக மாறியிருக்கும். நல்லவேளை அவள் போன தேர்தலில் தோற்றதால், மேற்குவங்கம் தப்பித்தது. பாஜகவுக்கு நன்றி.
எப்பொழுதுதோ மாறிவிட்டது என்று நினைத்தேன். இன்னும் மாறவில்லையா?மேலும்
-
வேடந்தாங்கலில் கேட்பிஷ் மீன்களின் அழிப்பு
-
பள்ளியில் திறனறி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
-
உளுந்துார்பேட்டை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியில் மெத்தனம்:விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
-
குடும்ப வன்முறை 2 பேருக்கு வலை
-
கிராம அம்மன் கோயில்களில் சேவையாற்றும் அம்மாடிகள்
-
பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா