கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்: பண்ருட்டியில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தல்  

பண்ருட்டி:பண்ருட்டி நகராட்சி குப்பையை கெடிலம் ஆற்றில் கொட்டுவதை நிறுத்த வேண்டும் என பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் எச்சரித்துள்ளார்.

பண்ருட்டி நகராட்சி நிர்வாகம், நகரில் சேகரிக்கும் குப்பைகளை கெடிலம் ஆறு மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் கொட்டி தீயிட்டு எரித்து வருகின்றது.

இதனை கண்டித்து, பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வந்தாமன், 'கெடிலம் காப்போம்' என்ற கோஷத்துடன் கடந்த ஜனவரி மாதம் நகராட்சி அலுவலகம் முன் குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். அதனையொட்டி அதேமாதம், தாசில்தார் தலைமையில் நடந்த கூட்டத்தில் இனிவரும் காலங்களில் குப்பையை கெடிலம் ஆற்றில் கொட்டப்படாது என உறுதியளித்தனர். ஆனால் தொடர்ந்து கெடிலம் ஆற்றில் ஆங்காங்கே குப்பை கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று கெடிலம் ஆற்றில் குப்பை கொட்ட வந்த டாடா ஏஸ் வாகனத்தை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.

அதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வாத்தாமன் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டி மாசபடுத்தியிருந்ததை ஆய்வு செய்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

'கெடிலம் காப்போம்' என்ற உறுதியுடன் கெடிலம் ஆற்றில் குப்பை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்தது பாராட்டுக்குரியது. குப்பையை ஆற்றில் கொட்ட மாட்டோம் என உறுதி அளித்துவிட்டு மீண்டும் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும்.

குப்பையை தரம் பிரித்து உரம் தயாரிக்கலாம். மின்சாரம் தயாரிக்கலாம். குப்பை கொட்டி எரிப்பதால், சுற்று சூழல் பாதிக்கிறது. ஆற்றில் கொட்டுவதால் பழமை வாய்ந்த நதியை வீணாக்குவதை நிறுத்தவில்லை எனில், பா.ஜ., தொடர்ந்து போராடும். ஆற்றில், குப்பை கொட்டுவது தொடர்ந்தால், மக்களே குப்பை வண்டிகளை சிறைபிடியுங்கள் நான் வருகிறேன். த.வெ.க., அரசு நதிகளை பாதுகாத்திடஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பேட்டியின்போது, பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுமார், பண்ருட்டி நகர அமைப்பாளர் வெற்றிவேல், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தேவா உடனிருந்தனர்.

@block_B@ உதயநிதியை கைது செய்தது சரியே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை கைது செய்தது சரியே. வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்த பின், போலீசார் எப்படி ஜாமினில் விட்டனர். கோர்ட் மட்டுமே ஜாமினில் வெளிவிட முடியும். எப்படி த.வெ.க., அரசு செய்தது. கடந்த தி.மு.க., அரசில் பல பொய் வழக்குகள் போட்டு மிரட்டியது. அதன்பலன்தான் தற்போது நிகழ்ந்துள்ளதுblock_B

Advertisement