வி.சி., தொண்டரணி செயற்குழு கூட்டம்

குள்ளஞ்சாவடி, ஆக. 7-

வி.சி., கட்சியின் தொண்டரணி மண்டல செயற்குழு கூட்டம், குள்ளஞ்சாவடியில் நடந்தது.

மாநில செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன், தொண்டரணி முதன்மை செயலாளர் பொதினிவளவன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அதியமான் சிறப்புரை ஆற்றினர்.

மண்டல செயலாளர் முருகையன், கடலூர் சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளர் கலை மோகன், தொண்டரணி மாநில துணை செயலாளர்கள் கதிர், தில்லை முரசு, மாவட்ட அமைப்பாளர்கள் திருமா கபிலன், சபரி, உதயா, ராமர், குணசுந்தரி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் 17ம் தேதி உளுந்துார்பேட்டையில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது, பாதுகாப்பு பணியில் தொண்டரணி ஈடுபடுவது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement