ஐயனார் கோவிலில் உண்டியல் அகற்ற முயற்சி: நெல்லிக்குப்பம் அருகே பரபரப்பு
நெல்லிக்குப்பம்:வில்லுகட்டி ஐயனார் கோவிலில் பூசாரிகளால் பராமரித்த உண்டியலை அகற்ற முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகள் தடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டில் கடலுார்-பண்ருட்டி சாலையில் வில்லுகட்டி ஐயனார் கோவில் உள்ளது. இக்கோவிலை பல தலைமுறைகளாக அதே பகுதியை சேர்ந்த 7 குடும்பத்தினர் சுழற்சி முறையகில் பூஜை செய்து வருகின்றனர். இவர்கள், பக்தர்களின் காணிக்கையை பெற உண்டியல் வைத்துள்ளனர்.
இந்நிலையில் 20 ஆண்டிற்கு முன் இக்கோவிலை தமிழக அரசின் ஹிந்து அறநிலையத்துறை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்த, அறநிலையத்துறை சார்பில் கோவிலில் தனி உண்டியல் வைத்தனர். இருப்பினும், பூசாரிகள் வைத்த உண்டிகளை அகற்றவில்லை.
இந்நிலையில், மூன்று மாதத்திற்கு முன் இக்கோவிலை ஆய்வு செய்த இணை ஆணையர் ஜோதி, பூசாரிகள் தனியாக உண்டியல் வைக்க அனுமதியில்லை. அதை அவர்களே அகற்றி கொள்ளுமாறு அறிவுருத்தினார். ஆனால் பூசாரிகள் தங்கள் உண்டியலை அகற்றவில்லை. அதனால், பூசாரிகள் உண்டியலை அகற்ற இணை ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் நேற்று அறநிலையத்துறை ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர்கள் தேவகி, முத்துலட்சுமி உள்ளிட்டோர், கோவிலில் உள்ள பூசாரிகளின் உண்டியல்களை அகற்ற முயன்றனர்.
உடன் பூசாரிகளின் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் சூழ்ந்து நின்று கொண்டு உண்டியல் அகற்றுவதை தடுத்தனர். இதனால் பதட்டம் நிலவியது.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என கூறினர். அதனையேற்று, பூசாரிகளின் உண்டியலை அகற்றுவதை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
@block_B@ ரூ.1.14 லட்சம் காணிக்கை வில்லுக்கட்டி ஐயனார் கோவில் }ஹந்து அறநிலையத்துறை சார்பில் வைக்கப்பட்ட உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி ஆய்வாளர் ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது. அதில், உண்டியலில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 268 ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர்.block_B
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்