இரண்டாவது சுற்றில் ரிபாகினா
டொரான்டோ: கனடாவில், பெண்களுக்கான நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஆஸ்திரேலியாவின் டாரியா கசட்கினா மோதினர். இதில் ரிபாகினா 6-3, 5-7, 6-4 என வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 7-5 என, சகவீராங்கனை கெய்லா டேயை வீழ்த்தினார். மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் வெற்றி பெற்றனர்.
மின்னல் தாக்கியதில் மரணம்
பாங்காக்: தெற்கு தாய்லாந்தில் நடந்த 'கோலோக் எப்.ஏ.,' கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டியில் சாம்கோல்ட்ஸ், அபு எக்ஸ் நோங் சிரின் அணிகள் மோதின. போட்டியின் போது சாம்கோல்ட்ஸ் அணி வீரர் சோப்வான் அவே 24, மீது மின்னல் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவே, மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதும் சிகிச்சை பலனின்றி அவே மரணமடைந்தார். கடந்த 2020 முதல் 2024 வரை தாய்லாந்தில் மின்னல் தாக்கியதில் 283 பேர் மரணமடைந்துள்ளனர்.
துருக்கி அணியில் சாலா
இஸ்தான்புல்: எகிப்து கால்பந்து வீரர் முகமது சாலா 34. உள்ளூர் போட்டியில் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப் அணிக்காக 9 ஆண்டுகளாக (2017-2026) விளையாடினார். இதில் 315 போட்டியில், 191 கோல் அடித்துள்ளார். லிவர்பூல் அணிக்காக 2 பிரிமியர் லீக், ஒரு சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று தந்துள்ளார். இந்நிலையில் லிவர்பூல் அணியில் இருந்து விலகிய இவர், துருக்கியின் டிராப்ஸான்ஸ்போர் அணிக்காக இரண்டு ஆண்டுகள் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார்.
எக்ஸ்டிராஸ்
* தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரு டெஸ்ட் (டிச. 9-12), மூன்று ஒருநாள் (டிச. 16, 19, 22) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது கூடுதலாக 3 போட்டிகள் (டிச. 26, 29, 30) கொண்ட 'டி-20' தொடரில் விளையாடுகிறது.
* சீனாவில், பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் (ஆக. 30 - செப். 13) நடக்கவுள்ளது. இதற்கான 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு 'மிட்-பீல்டர்' கைதம் ஷிலேமா சானு நியமிக்கப்பட்டார்.
* அசாமின் கவுகாத்தியில் நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் போடோலாந்து அணி 3-0 என, எப்.சி., 1 அணியை வீழ்த்தியது.
* ''டில்லி, இந்திரா மைதானம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு, மிகச் சிறந்த உலக சாம்பியன்ஷிப் (ஆக. 17-23) தொடரை நடத்த தயாராக உள்ளோம்,'' என, இந்திய பாட்மின்டன் சங்க செயலர் சஞ்சய் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
* ''ஸ்பான்ஷர்ஷிப், வேலை வாய்ப்பு போன்றவை மாற்றுத்திறனாளிகளுக்கான 'பாரா' விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும்,'' என, கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு குண்டு எறிதலில் (எப்57) தங்கம் வென்ற சோமன் ராணா தெரிவித்துள்ளார்.
மேலும்
-
எண்ணெய் பனை சாகுபடிக்கு மானியம் -
-
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி பயிற்சி
-
நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்றிய டாடா, ஸோஹோ; எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இயந்திரத்தை உருவாக்கிய பொறியாளர் நெகிழ்ச்சி
-
செப்.,1 முதல் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் துவங்கும் ஏர் இந்தியா
-
வெள்ளிக்குறிச்சியில் 1008 திருவிளக்கு பூஜை
-
மும்பையில் பிரசாந்த் கிஷோர்; தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு