போலீசாரை கண்டித்து மறியல்

நிலக்கோட்டை:நிலக்கோட்டை அருகே சங்கால்பட்டியில் கஞ்சாவிற்கு அடிமையான வாலிபர்கள் சிலர் பெண்களை கேலி, கிண்டல் செய்வது, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் பெண் ஒருவர் வீட்டு பாத்ரூமில் குளித்தை வீடியோ எடுத்ததாக 16 வயது சிறுவனை பிடித்து நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement