போதை விழிப்புணர்வு பேரணி

மயிலம் ஆக. 7–: திண்டிவனம் கல்வி மாவட்டம் மயிலம் அடுத்த செ. கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அம்புரோஸ் புருஷோத்தமன் சண்முகம் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் ஜெயராஜ்பிரபு வரவேற்றார். பேரணி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்  ரேகா, ஆய்வக உதவியாளர் குமரவேல் ஆகியோர் செய்தனர்.

பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு  பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில்கலந்து கொண்டனர்.  முடிவில் போதை  விழிப்புணர்வு குறித்து ஆசிரியர் கோவிந்தன் பேசினார்.  இதில் மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement