ரஹானே புதிய இன்னிங்ஸ்: ஸ்டீவ் வாக் அணியில் ஒப்பந்தம்
மும்பை: ரஹானே முதல் முறையாக வெளிநாட்டு லீக் தொடரில் விளையாட உள்ளார். ஸ்டீவ் வாக்கின் 'ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ்' அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் பேட்டர் ரஹானே, 38. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்து, அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்க உள்ள ஐரோப்பிய 'டி-20' பிரிமியர் லீக் (இ.டி.பி.எல்.,) தொடரில் (ஆக. 26-செப். 20) நட்சத்திர வீரராக விளையாட உள்ளாார். இதில் 6 அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் இணை நிறுவனராக உள்ள 'ஆம்ஸ்டர்டாம் பிளேம்ஸ்' அணிக்காக ரஹானே களமிறங்க உள்ளார்.
உலக அளவில்: ரஹானே கூறுகையில்,''நான் ஓய்வை அறிவித்த ஐந்தாவது நிமிடத்தில் ஸ்டீவ் வாக் அழைத்தார். அவரது ஆட்டத்தை பார்த்து வளர்ந்தவன் நான். ஸ்டீவ் வாக்கின் அஞ்சாத தலைமையை கண்டு வியந்திருக்கிறேன். சற்று யோசித்த பின் சம்மதம் தெரிவித்தேன். என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். இந்திய அணி, பிரிமியர் லீக்கில் ஏற்கனவே விளையாடிய நிலையில், உலக அளவில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகிறேன். ஐரோப்பாவின் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கவும், ஆம்ஸ்டர்டாம் அணியின் வளர்ச்சிக்காகவும் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்குகிறேன்,''என்றார்.
ஸ்டீவ் வாக் கூறுகையில்,''தலைமைப்பண்பு, மனஉறுதி உட்பட தொழில்ரீதியான கிரிக்கெட் வீரருக்கு தேவையான அனைத்து திறமையும் ரஹானேவிடம் உண்டு. களத்தில் தனது சிறப்பான நடத்தை காரணமாக, அனைவரது மதிப்பையும் பெற்றவர். இவரது அனுபவம், ஆம்ஸ்டர்டாம் அணிக்கு உதவும்,'' என்றார்.
பயிற்சியாளராக 'ரெடி'
ரஹானே கூறுகையில்,''என்னால் கிரிக்கெட் வீரர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியும். எதிர்காலத்தில் பிரிமியர் லீக் அணியின் ஆலோசகர், மும்பை, இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற தயாராக உள்ளேன். எனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளேன்,''என்றார்.
இலங்கையில் எப்படி
இந்திய அணி 2017ல் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வென்றது. அப்போது இலங்கை மண்ணில் அசத்திய ரஹானே ஒரு சதம், அரைசதம் உட்பட 229 ரன் எடுத்து, வெற்றிக்கு கைகொடுத்தார்.
தற்போதைய டெஸ்ட் தொடர் பற்றி ரஹானே கூறுகையில்,''சொந்த மண்ணில் இலங்கை அணி கடும் சவால் கொடுக்கும். இங்குள்ள ஆடுகளம் 'ஸ்பின்னர்'களுக்கு சாதகமாக இருக்கும். அளவுக்கு அதிகமாக இந்திய வீரர்கள் தற்காப்பு ஆட்டம் ஆடக்கூடாது. சூழ்நிலையை உணர்ந்து பேட் செய்வது அவசியம். 'டி-20' வரவுக்கு பின் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறை மாறிவிட்டது. டெஸ்டிலும் 'ஸ்விட்ச் ஹிட்', 'ரிவர்ஸ் ஸ்கூப்' முறையில் அதிவேகமாக ரன் எடுக்கின்றனர்,''என்றார்.
வாழ்த்துக்கள்.மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது