துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
டெஹ்ரான்: துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவுக்கு பாதுகாப்பை தராது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், நம் அண்டை நாடான பாகிஸ்தானும், சவுதி அரேபியா மற்றும் துருக்கியும் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீது நடத்தப்படும் தாக்குதல், மற்ற இரு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
சவுதியின் மெக்காவில் உள்ள அல் சபா அரண்மனையில் நடந்த கூட்டத்தின் போது, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதற்கு, 'மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்' என பெயரிடப்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க சவுதி அரேபியா, அணு ஆயுத பலம் வாய்ந்த பாக்., மற்றும் நேட்டோ அமைப்பில் இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்டுள்ள துருக்கி ஆகியவை இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக ஒரே பாதுகாப்பு குடையின் கீழ் வந்துள்ளன. இது, சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பார்லிமென்ட் எம்.பி., இப்ராஹிம் ரெசாயி வெளியிட்டுள்ள பதிவில்,
''அமெரிக்காவுக்குப் பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்ச ஆதரவு அளித்தும் பாதுகாப்பு கிடைக்காதது போல, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான வெறும் காகித ஒப்பந்தமும் அவர்களுக்குப் பாதுகாப்பைத் தராது என்பதை சவுதி அரேபியா உணர வேண்டும்.
மற்றவர்களிடம் பாதுகாப்பிற்கு கெஞ்ச வேண்டிய நிலை ஏற்படாத வகையில், உங்கள் கொள்கைகளைச் சீரமைத்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டு உள்ளார்.
அமைதி மார்கத்தினர் அமைதியாக இருக்க வழி தேடுகிறார்கள்.
சவுதிக்கு என்ன ஆச்சு வேற நாடுகள் இல்லை யா
நடந்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா-ஈரான் போரில் சில சமயம் சவூதி மீதும் ஈரான் தாக்குதல் நடத்துகிறது, தற்போது இந்த ஒப்பந்தப்படி சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தி தன்னோட வீர தீர பராக்கிரமத்தை வெளிப்படுத்துமா?
அது தெரிந்தே தான் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள்
வெறும் அணுவாயுதங்களைக் கொண்டிருப்பது மட்டுமே பாகிஸ்தானை ஒரு பலம் வாய்ந்த கூட்டாளியாக மற்ற இஸ்லாமிய நாடுகளுக்கு கொடுத்துவிடாது .... இந்தப் புரிதல் அவர்களுக்கு வேண்டும் .....
சவூதி அரேபியா , கோதுமை மாவுக்கு பிச்சை எடுக்குற ஒரு நாடு கூட புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது வியப்பு அளிக்கிறது ..
அமைதிகள் எப்பவும் யாரோட சேரலாம் யாரைத் தாக்கலாம் எனும் சிந்தனையிலேயே உலக அமைதியைக் கெடுக்கின்றனர்.மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது
-
ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது