கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
சென்னை: கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இதே போன்ற கட்டுப்பாடுகள் போலீசார், அரசியல்வாதிகளுக்கும் விதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதியும் வழங்கக்கூடாது; இந்த நடைமுறையை அனைத்து கோயில்களிலும் உடனடியாக பின்பற்ற ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:
* திரைத்துறை முதலான கலைத்துறை பிரபலங்கள், முக்கிய நபர்கள் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவதாக தெரியவந்தால் குறைந்தது ஒரு நாளுக்கு முன்பாக அல்லது தெரிய வந்த உடன் அவர்கள் வரவிருக்கும் திருக்கோவில், வருகை நேரம், அவர்களுடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரங்களையும் ஆணையர் அலுவலகத்திற்கு கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும்.
* அத்தகைய வருகையின்போது, திருக்கோவில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதற்கும், காணொளி பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
* பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களின் வருகையின்போது, பக்தர்களின் தரிசனத்திற்கு எந்தவித இடையூறு ஏற்படாத வகையில், அவர்களின் நுழைவு மற்றும் இயக்கம் உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். திருக்கோவிலின் புனிதத் தன்மையும், மரபு சார்ந்த ஒழுங்கும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது.
* முன்கூட்டியே அனுமதி வழங்கப்பட்டவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அலுவலர்கள் பணியாளர்கள் மட்டுமே பிரபலங்கள் அல்லது முக்கிய பிரமுகர்களுடன் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்து திருக்கோவில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைத்துச் செயல் அலுவலர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் எவ்வித விதிவிலக்கும் இன்றி, மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் வினய் கூறியுள்ளார்.
அரசியல்வாதி, போலீசுக்கு எப்போது?
ஒவ்வொரு முறையும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கோவிலுக்கு வரும்போது அவர்களுடன் 10 முதல் 20 பேரை அழைத்து வருகின்றனர். வரிசையிலும் காத்திருப்பதில்லை, டிக்கெட் எடுக்காமல் கூட்டமாக கோவிலுக்குள் செல்கின்றனர்.
தடுக்க வேண்டும்
இத்தகைய செயல், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்துகிறது. டிக்கெட் எடுக்காத அரசியல் பிரமுகர்களை கோவில் அதிகாரிகள் கண்டிப்புடன் தடுத்து நிறுத்த வேண்டும்.
தேவை டிஜிபி உத்தரவு
அரசியல்வாதிகளைப் போலவே போலீசாரும் டிக்கெட் இல்லாமல் ஆட்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர். இதை தடுக்க, டிஜிபி, போலீசாருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
@block_G@
கோவில்களில், விசேஷ காலங்களிலும், சுவாமி அலங்காரம், ஊர்வலத்தின்போதும் மட்டுமே நாதஸ்வரம், மேளம் வாத்தியம் இசைக்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
ஆனால் விஜய் ஆட்சிக்கு வந்த நிலையில் பல கோவில்களில் புதிய நடைமுறை ஒன்று துவங்கியுள்ளது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட விஐபிகள் வருகையின் போது அவர்களுக்கு முன்னதாக நாதஸ்வரம், மேளம் இசைத்தபடி செல்கின்றனர்.
இது தவறான நடைமுறை. கோவில்களில் வீற்றிருக்கும் சுவாமியை அவமதிக்கும் செயல் என்று வேதனைப்படுகின்றனர் பக்தர்கள்.
இதற்கு முடிவு கட்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.block_G
கோவில்களில் நடக்கும் ஊழல்களையும் மற்றும் சுத்தமற்ற இடங்களையும் மற்றும் வேண்டியவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளையும் போட்டோ எடுத்து சாட்சியாக பயன்படுத்துவதை தவிர்க்கவே பக்தர்களை செல் போன் எடுத்துசெல்லக்ககூடாது என்ற விதியினை போடப்பட்டுள்ளது என்று பலர் பேசிக்கொள்கிறார்கள்.
காமிரா சாதனம் என்பது ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பு சாமான்ய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. ஆடியோ, வீடியோ சாதனங்கள், கம்பியூட்டர், செல்போன்கள் வந்த பின்னரே நம் நாட்டில் உள்ள பல கோயில்களின் பெருமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இன்னமும் தெரிய வந்து கொண்டிருக்கிறது. எனவே, கோவில்களில் வீடியோ, புகைப்படம் எடுப்பதைத் தடை செய்வதை ஏற்க முடியவில்லை. சினிமா நட்சத்திரங்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் வரும் சமயத்தில் பாதுகாப்பு காரணம் கட்டி சில ஒழுங்கு முறை நடவடிக்கைகளை கோவில்களில் அந்த சமயங்களில் மட்டும் மேற்கொள்ளலாம். தவறில்லை. கர்ப்பக்கிரகத்தில் உள்ள இறைவனைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் என சாமி சொல்கிறதா? அல்லது ஆசாமிகள் சொல்கிறார்களா? நிறைய பாடல் பெற்ற தலங்களின் சாமி சிலைகள், செப்பு உற்சவ மூர்த்தி விக்கிரகங்களை புகைப் படம் எடுத்து வைத்துக் கொள்ளாத காரணத்தினாலேதான் நிறைய திருட்டு போயுள்ளன திருட்டுப் போனது கூட இதனால்தான் பொதுமக்களுக்கு தெரியாமல் போயிற்று. புகைப்படம் எடுப்பது தவறு எனில் அந்த காலத்தில் ஓவியர் சிற்பி போன்றோர் கர்ப்பக்கிரகத்தில் உட்கார்ந்து கொண்டு படமாக வரைந்தது எப்படி? ஏன் கும்பாபிஷேகத்தின் போது கடவுளின் உருவங்களை ஓவியரை வைத்து சுவரில் வண்ணம் தீட்டச் சொல்கிறார்கள்? அது மட்டும் பாவமில்லையா? அது போல கடவுளரின் உருவத்தை சிற்பமாக வடிவமைப்பது, அச்சிட்டு காலண்டராக விற்பது இவையெல்லாம் தடை செய்யப்பட வேண்டாமா?

ஸ்வாமிக்கு பிடிக்கும் குடையை துர்கா ஸ்டாலினுக்கு சபிடித்து சென்று யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
நானும் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்... இந்த வி ஐ பி, வி வி ஐ பி மற்றும் சினிமாத்துறையினருக்கு எதற்கு சிறப்பு தரிசனம் என்று? கேட்டாத்தானே... கடவுளின் முன்பு அனைவரும் சமம். ஆகையால் எவனாக இருந்தாலும், சாமி கும்பிட வரும்போது மற்ற சாமானியர்களைப்போல வரிசையில் நின்றுதான் வரவேண்டும் என்று ஒரு சட்டமே இயற்றவேண்டும். அதை முறையாக செயல்படுத்தவேண்டும். சட்டத்தை இயற்றுபவர்களும் வரிசையில் வரவேண்டும் என்பது பொதுமக்களின் பணிவான கோரிக்கை.
பொது மக்கள் ஏமாளிகள்
லாட்டரி ஆட்சிக்கு வந்த நிலையில் பல கோவில்களில் புதிய நடைமுறை ஒன்று துவங்கியுள்ளது.
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட விஐபிகள் வருகையின் போது அவர்களுக்கு முன்னதாக நாதஸ்வரம், மேளம் இசைத்தபடி செல்கின்றனராம் .....இப்படி பட்ட செயல்கள் பெரிய கோவில் அவமதிப்பு அனாச்சாராம் .....இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும் ...
கோயிலுக்குள் இடைஞ்சல் தரும் விதத்தில் சப்தமாக பேசுவது , வீடியோ ஷூட்டிங், ஷார்ட்ஸ் எடுப்பதை தடை செய்வது சரி என்றாலும், உரத்த சப்தமாக போனில் பேசுவதையும், கர்ப்பகிரகத்தில் கேமரா நடவடிக்கைகளை தடை செய்யலாம். மொபைல் ஜமெர் சாதனங்களை கோயிலுக்கு உள் நிறுவலாம்.
அதிக படியான கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்களுக்குள் பிரதட்சிணம் வருவதை கூட பல பிரபலமான கோயில்களில் தடை செய்துள்ளார்கள். அதிலும் அரசியல் பிரமுகர்கள் வருகையின் பொது பொது மக்கள் சாமி தரிசனம் செய்வதை கூட தடுக்கிறார்கள்
ஆனால், தங்கள் வாணாளில் , எப்போதோ ஒரு முறை , பல்வேறு ஊர்களில் இருந்து வரும் மக்கள் தங்கள் நினைவாகவும், கோயில்களின் சிறப்பை, சிற்ப கலையை ரசிக்கும் விதமாக போட்டோ எடுக்க விரும்புவதில் தவறு இருப்பதாக நினைக்க முடியவில்லை. அனுமதிக்க வேண்டும்.
இந்து அறநிலைய கோவில்களில் மட்டும் தான் இந்த விஐபி Special தரிசன கூப்பாடுகள்.
இந்த மாதம் முதல் குருவாயூர் கோவிலில் ஆன்லைன் தரிசன முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். சோதனை முயற்சியாக செவ்வாய் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் மணிக்கு 300 பேர் வீதம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்துக்கு , பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர்.
இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே நடைமுறையை கூட்டம் அதிகம் வருகின்ற தமிழக பெரிய கோவில்களில் எல்லா நாட்களிலும் கொண்டுவந்தால் என்ன ?