இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
நமது நிருபர்
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதத்தில் இருந்து 100 சதமாக உயர்த்தும் மசோதாவுக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகுக்கும் புதிய மசோதா அமெரிக்க செனட் சபையில் 86-11 என்ற கணக்கில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா முழுமையாகச் சட்டமாக மாற அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலும் அதிபரின் கையெழுத்தும் தேவைப்படுகிறது. இது வரும் ஆகஸ்ட் 31ம் தேதி பிரதிநிதிகள் சபை மீண்டும் கூடும்போது ஒப்புதலுக்காக அனுப்பப்படும். ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% வரி விதிக்க, இந்த மசோதா அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் அளிக்கிறது.
உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்யும் வகையில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. 'லின்சி ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் சட்டம் 2026' (Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026) என இந்த மசோதா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை அமெரிக்கா நிறைவேற்றி இருப்பது இந்தியா, சீனா, அஜர்பைஜான், ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறைந்த விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதா அல்லது அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்வதா என்பதை இந்த நாடுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த மசோதா, அதிபர் புடின் உள்ளிட்ட ரஷ்யத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது தடைகளை விதிக்கவும் வழி வகுக்கிறது. ரஷ்யா மீதான நடவடிக்கைகளுடன் சேர்த்து, இந்த மசோதா 1996ம் ஆண்டின் ஈரான் மீதான தடைகள் சட்டத்தை 2031 வரை நீட்டிக்கும். இந்தச் சட்டம் ஈரானின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்குத் தண்டனை வழங்கவும் அதிகாரம் அளிக்கிறது.
சீனா மற்றும் இந்தியா மீதான 100% வரி விதிப்பு மசோதா Lindsey O. Graham Sanctioning Russia and Iran Act of 2026 செனட் சபையில் 86-11 என்ற கணக்கில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. காரணம் அந்த மசோதாவை முன்மொழிந்த லிண்ஸ்சே க்ரஹாம் பொட்டுன்னு போனதால், அந்தாளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாடகம் அரங்கேறியது.
இந்த மசோதாவிற்கு பிரதிநிதிகள் சபையில் சில பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான எதிர்ப்புகள் இருப்பதால், அங்கு இது எளிதில் நிறைவேற வாய்ப்பு இல்லை. இது நிறைவேறினால் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் பெரும் நெருக்கடி ஏற்படும்.
அமெரிக்கா மக்கள் பாவம் டிரம்பிடம் ஆட்சி செய்ய கொடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது
இந்தியா வரி விதிப்பை முழுமையாக எதிர்க்கவேண்டும். இனிமேல் ரஷ்யாவிடம், ஈரான் இருந்து ஆயில் வாங்கலாம். இந்தியா பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும்
என்றால் அமெரிக்கா முழுமையாக வரி விலக்கு தரவேண்டும். இந்தியாவை நம்பி தான் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை.
நாம் அமெரிக்காவில் இருந்து இறக்குமது செய்யும் பொருட்களுக்கு 150 சதவிகிதம் வரி விதிக்க வேண்டும்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா முடிவு செய்ய அனுமதிக்க கூடாது
நாம் வேறு சந்தையை நாட வேண்டும்.ஈரான் ரஷ்யா ஹங்கேரி ஸ்லோவாக்யா நாடுகளின் சந்தை உள்ளது
அமெரிக்கா அழியப்போவது உறுதி
மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும், அமெரிக்க மக்களுக்கும் விடியல் கிடைக்கும்.
நீங்களும் வரி போடுங்க
அமெரிக்கர்கள், தவிக்கமுடியாத இந்திய, சீன பொருள்களுக்கு அவர்கள் அதிக விலை கொடுக்கவேண்டும். தன் மக்களுக்கே ஆப்படிக்கிறது அமெரிக்கா
இந்தியாவுல இறக்குமதி செய்யப்படும் America பொருளுக்கு 200% வரி போடலாமேமேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது
-
ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 பெஸ்காம் அதிகாரிகள் கைது