ஆடி 4ம் வெள்ளி சிறப்பு வழிபாடு

வடமதுரை: ஆடி மாத 4ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு கூழ்வார்த்து தரிசனம் செய்தனர்.

வடமதுரை மீனாட்சியம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன், மோர்பட்டி பத்திரகாளியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன், தென்னம்பட்டி சவுடம்மன் கோயில்களில் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வழங்கிய அரிசி, கம்பு, கேழ்வரகு கலந்த கூழ் தயாரிக்கப்பட்டு அபிஷேகத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் நீர், பால் அபிஷேகம் நடந்தது. வாலை திரிபுரை சக்திக்கு சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. கரியன் குளக்கரை தேவி கருமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வழங்கிய கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை கலந்த கூழ் தயாரிக்கப்பட்டது. பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு கூழ் வழங்கல் நடந்தது. சமயபுரம் மாரியம்மன் கோயில், ஜீவா நகர் சந்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

ஒட்டன்சத்திரம்: கே.அத்திக்கோம்பை காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்து கூழ் படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். விருப்பாச்சி தலையூற்று நாக விசாலாட்சி அம்மன் கோயில், சாலைப்புதுார் காளியம்மன் கோயில், காளாஞ்சிபட்டி காளாஞ்சி அம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில், தங்கச்சியம்மாபட்டி கரைமாரியம்மன் கோயில், பெயில்நாயக்கன்பட்டி காளியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

Advertisement