தி.மு.க., 'மாஜி'க்கு எதிரான 'பிடிவாரன்ட்' வாபஸ்
சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, 'பிடி வாரன்ட்' உத்தரவை, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் திரும்ப பெற்றது.
சென்னையில் கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில் பங்கேற்ற, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.
இது தொடர்பாக, சென்னை பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன் புகார் செய்தார்.
இந்த புகாரை விசாரணைக்கு ஏற்று, ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, பொன்முடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது, ஜூலை 2ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த வழக்கு, ஜார்ஜ் டவுன் மூன்றாவது மாஜிஸ்திரேட் சுந்தரபாண்டியன் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பொன்முடி நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், ஜார்ஜ் டவுன் மூன்றாவது மாஜிஸ்திரேட் சுந்தரபாண்டியன் முன், நேற்று பொன்முடி நேரில் ஆஜராகி, தனக்கு எதிரான பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெறக்கோரி மனு தாக்கல் செய்தார்.
அதை ஏற்ற நீதிபதி, பிடிவாரன்ட் உத்தரவை திரும்ப பெற்று, விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
money is ultimate power. it can purchase anything.
அதுதானே பார்த்தேன், சாதாரண குடிமகனை நடத்துவதுபோல் எங்களை நடத்தமுடியுமா? நாங்க யாரு? எங்க பவர் என்ன?
நேரில் ஆஜரானால் குற்றத்திலிருந்து தப்பிக்க விடக்கூடாது.
பிடிவாரண்ட் வேண்டாம் என்று நீதிபதியைச் சந்தித்து அதைத் தள்ளுபடி செய்ய சட்டத்தில் இடமுண்டா ??
இவரை வெளியே விட்டதே தவறு. இது நீதிமன்றம் செய்த செயல்.மேலும்
-
பழநி கோவில் நில மோசடி வழக்கு; கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழப்பு
-
தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: இன்றும் சவரனுக்கு ரூ.520 உயர்வு
-
கோவில்களில் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது; சினிமா பிரபலங்கள், விஐபிகளுக்கு கட்டுப்பாடு
-
துருக்கி, பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பை தராது; ஈரான்
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கும் மசோதா; அமெரிக்கா நிறைவேற்றம்
-
மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி; 4வது நபர் கைது